கன்னியாகுமரி அணை பகுதிகளில் கனமழை
கனமழை
குமரி மாவட்டத்தின் மலையோர கிராமங்களிலும், அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை 44.85 அடியாக இருந்தது. அணைக்கு 2,237 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மதகுகள் வழியாக 632 கன அடி தண்ணீரும், உபரிநீராக 3,048 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.31 அடியாக உள்ளது. அணைக்கு 1,059 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
சிற்றார் 1 அணை நீர்மட்டம் 16.79 அடியாக உள்ளது. அணைக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 2 அணை நீர்மட்டம் 15.80 அடியாகவும், மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 45.19 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 21.80 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 9.4, பெருஞ்சாணி 7.4, சிற்றாறு 2-4, கன்னிமார் 2.8, மயிலாடி 2.2, நாகர்கோவில் 4.2, பூதப்பாண்டி 3.2, முக்கடல் 2, பாலமோர் 11.4, தக்கலை 5.2, குளச்சல் 6.4, இரணியல் 6.2, அடையாமடை 1.6, குருந்தன்கோடு 2.6, கோழிப்போர்விளை 3.6, மாம்பழத்துறையாறு 3, களியல் 16.2, குழித்துறை 8.4, சுருளோடு 7.2, ஆணைக்கிடங்கு 2.6, திற்பரப்பு 6.5.