கோவில்பட்டியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை!

கோவில்பட்டியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை!

 கோவில்பட்டியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவில்பட்டியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இன்றும் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது மட்டுமின்றி அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்தது. நேரம் செல்ல செல்ல சாரல் மழை பலத்த மழையாக பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி கயத்தார்,கழுகுமலை,நாலாட்டின்புதூர்,அய்யனேரி அப்பனேரி இனாம்மணியாச்சி, எட்டயபுரம்,, வானரமுட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை தொடர்ச்சியாக பெய்தது

Tags

Next Story