மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய,விடிய பலத்த மழை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விடிய,விடிய பலத்த மழை
கனமழை 
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக, தமிழகம் முழுதும் பலத்த மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல், லேசான மழை துவங்கி, நள்ளிரவில் பலத்த மழையாக மாறி விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது,காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில்இன்று காலை வரை பெய்த மழை அளவு: மயிலாடுதுறை 8.41சென்டிமீட்டர் மணல்மேடு 5.8 சென்டிமீட்டர்., சீர்காழி 7.32 சென்டிமீட்டர்., கொள்ளிடம் 6.38 சென்டிமீட்டர், பொறையார் 7.71 சென்டிமீட்டர் செம்பனார்கோயில் 5.56 சென்டிமீட்டர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக 68.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

Tags

Next Story