ராஜபாளையத்தில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

ராஜபாளையத்தில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

 ராஜபாளையத்தில் கனமழை பெய்தநிலையில், வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  

ராஜபாளையத்தில் கனமழை பெய்தநிலையில், வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த 12ம் தேதி மாலை வெப்ப சலனம் காரணமாக சுமார் அரை மணி நேரம் கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது.

மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் இன்று பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக இரவு 11 மணிக்கு மேல் நகர் பகுதிகள் மற்றும் நகரை சுற்றி அமைந்துள்ள பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேல் கன மழை பெய்தது. மழை காரணமாக ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 2 அடி உயரத்திற்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருந்தது. அந்த வழியாக சென்ற மது பிரியர் ஒருவர் தேங்கியிருந்த மழை நீரில் கை கால்களை நீட்டி படுத்தவாறு மூன் பாத் எடுத்தபடி உற்சாகமாக குளித்து மகிழ்ந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story