சேலத்தில் வெளுத்து வாங்கிய மழை

சேலத்தில் வெளுத்து வாங்கிய மழை

சாலைகளில் தேங்கிய மழை நீர்

சேலத்தில் நேற்று பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கி நின்றதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

சேலம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில பகுதிகளில் குளிர்ந்த காற்றும் வீசியது. நேற்று மதியம் 2.45 மணி அளவில் மழை பெய்யத்தொடங்கியது. அதன்பிறகு சீரான இடைவெளியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் 4 ரோடு, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

சங்கர் நகர் 3-வது குறுக்கு தெருவில் சாக்கடை கால்வாயில் மழை நீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் குட்டை போல் தேங்கியது. கிச்சிப்பாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் அங்குள்ள பிரதான சாலையில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.

Tags

Next Story