கட்டுமாவடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

கட்டுமாவடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

கட்டுமாவடி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

கட்டுமாவடி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது. இது மேலும் தீவிரமடைந்து புயலாக மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதியான கட்டுமாவடி,மணமேல்குடி பகுதிகளில் இன்று காலை முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது.

Tags

Next Story