மகாராஜகடை சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை

மகாராஜகடை சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை

மழை

கிருஷ்ணகிரி மாவட்டம் ,வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகாராஜாகடை மற்றும் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ,வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகாராஜாகடை மற்றும் பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இப்பகுதியில் கடும் வெயில் தாக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 3 மணி முதல் 4 மணி வரை மகராஜகடை, நார்லபள்ளி சக்கனாவூர், பெரிய சக்கனாவூர், ஏக்கல்நத்தம் பகுதியில் கனமழை பெய்தது.

இதனால் தாழ்வான பகுதிகளிலும் சாலைகளிலும் மழை மழை பெருக்கெடுத்து ஓடியது. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பகுதி கனமழை பெய்துள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Tags

Next Story