திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை - பள்ளிப்பட்டில் 12 செ.மீ மழை பதிவு
மழை
வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மிக்ஜம் புயல் உருவாகி நாளை நெல்லூர் மசிலிப்பட்டணம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. நீர் நிலைகளுக்கு மழை நீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் ஓரிரு நாட்களில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால் கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனேக இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சுழ்ந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றது.
Tags
Next Story