தி. மலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை

X
மழை
திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வேங்கிக்கால், நல்லவன்பாளையம், அடிஅண்ணாமலை, தென்மாத்தூர், அழகானந்தல், கீழ்நாச்சிப்பட்டு, வாணியந்தாங்கள், நொச்சிமலை, சோமாசிபாடி, கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக குளிர்ந்த காற்றுடன் கூடிய பலத்தமழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வந்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து ஏரி குளம் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. நேற்று திருவண்ணாமலை நகரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக குளிர்ந்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகளும், பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags
Next Story
