தூத்துக்குடி : அதிகாலை பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி

கனமழை


தூத்துக்குடியில் இன்று அதிகாலையில் பெய்த காற்றுடன் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்து வந்தது. இதன் காரணமாக வெப்பத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி முதல் விட்டு விட்டு பெய்து வந்த மழை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தூத்துக்குடி வ உ சி சாலை, பழைய மாநகராட்சி, பேருந்து நிலையம், மூன்றாவது மைல், பிரைன் நகர் திரேஸ்புரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக வெயிலில் வாட்டி வந்த நிலையில் தற்போது வெப்பம் குறைந்து குளிர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story



