ஒசூர் அருகே கொட்டித்தீர்த்த மழை; பாலம் இல்லாததால் மக்கள் அவதி

ஒசூர் அருகே கொட்டித்தீர்த்த கனமழையில் தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டதால் 3 கிராம மக்கள் போக்குவரத்து சிரமத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வட்டம், அந்தேவனப்பள்ளி - குந்துக்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு இடையே நீரோடைகள் கடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருந்த பாலம், புணரமைக்கப்பட்டு வருகிறது.. இந்த பாதையில் தான் 3 கிராம மக்கள் பயணிக்க வேண்டிய சூழலில், கிராம மக்களின் வசதிக்காக தர்காலிக சாலை அமைத்து பாலம் பணிகள் நடைப்பெற்று வந்தநிலையில் நேற்றிரவு தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, ஓடைகளில் பாய்ந்த நீரால் குந்துக்கோட்டை - அந்தேவனப்பள்ளி கிராமங்களுக்கு இடையே இருந்த தற்காலிக சாலை முழுமையாக அடித்து செல்லப்பட்டதால், சாலை அமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது..

இதனால் 3 கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.. குந்துக்கோட்டை கிராமத்தில் 4 ஏக்கர்கள் பரப்பளவில் அறுவடைக்கு தயாராகி இருந்த வாழை மரங்கள் அதிகப்படியான காற்று, கனமழையால் சாய்ந்து விழுந்துள்ளன.. பெரும் நஷ்டத்தை சந்தித்திருப்பதால் அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags

Next Story