திடீரென கொட்டி தீர்த்த கனமழை

திடீரென கொட்டி தீர்த்த கனமழை

கனமழை 

சங்ககிரியில் திடீரென கொட்டி தீர்த்த கனமழை பள்ளி மாணவ,மாணவிகள் அவதியடைந்தனர்.

தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கணம் மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன்படி சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்ககிரி நகர், பச்சக்காடு, குப்பனூர் ,அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, தேவூர், மயிலம்பட்டி, வட்ராம்பாளையம், காவேரிப்பட்டி, மோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மாலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசிய பின்னர். காற்று,இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் பள்ளி முடித்து வீட்டுக்குச் சென்ற மாணவ, மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது இதனால் அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story