கனமழை : நிரம்பி வழியும் வலசக்கல்பட்டி ஏரி
வலசக்கல்பட்டி ஏரி
கெங்கவல்லி தாலுகா 74.கிருஷ்ணாபுரம் ஊராட்சியில், வலசக்கல்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி 74.கிருஷ்ணாபுரம், கெங்கவல்லி, வலசக்கல்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. விவசாய கிணறுகள். வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் விளங்குகிறது. தமிழக அரசின் உத்தரவை அடுத்து ஏரியில் வண்டல் மண் அள்ளப்பட்டது. தற்போது சேலம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்துள்ளதால், வலசக்கல்பட்டி ஏரி தனது முழு கொள்ளவான 40 அடியை எட்டியுள்ளது. மேலும் தடுப்பணை வழியாக 2,500 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.இதனால் வலசக்கல்பட்டி, வேப்பந்தட்டை,கெங்கவல்லி ஆகிய ஊர்களில் உள்ள 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். தவிர, கெங்கவல்லி சுற்றியுள்ள கிராமங்களில் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.