அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை!

அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொட்டி தீர்த்த கனமழை!

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீர்

அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை கொட்டித்தீர்த்தது.இந்த மழை காரணமாக அன்னூர் கோவன் குளம் முழு கொள்ளவை எட்டிய நிலையில் உபரி நீர் வெளியேறி வருகிறது.உபரி நீர் செல்லும் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ளது. குறிப்பாக அன்னூர் புவனேஸ்வரி நகர் மற்றும் பழனி கிருஷ்ணா நகர் அவென்யூ உள்ளிட்ட குடியிருப்புகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.இதனால் அப்பகுதி வாசிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஒவ்வொரு முறையும் குளம் நிரம்பும் போதெல்லாம் இப்பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக குற்றம் சாட்டும் இப்பகுதி வாசிகள் கோவை - சத்தி சாலையில் உள்ள பாலத்தில் சிலர் மண்ணை கொட்டி அடைத்துள்ளதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் போனதாகவும் இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவித்தனர்.மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags

Next Story