சங்ககிரி அருகே பகலில் கொட்டி தீர்த்த கனமழை

சங்ககிரி அருகே பகலில் கொட்டி தீர்த்த கனமழை
X

கனமழை 

சங்ககிரியை அடுத்த தேவூர்,அரசிராமணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை தொடர்ந்து சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அம்மாபாளையம், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடசக்கரை, காணியாளம்பட்டி, புள்ளாகவுண்டம்பட்டி, வட்ராம்பாளையம், சென்றாயனூர், ஒக்கிலிப்பட்டி,மோட்டூர், தண்ணீர்தாசனுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

திடீரென மதிய வேளையில் காற்றுடன் கூடிய கனமழை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story