கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய ஆட்டோ

கனமழையால் மரம் ஒடிந்து விழுந்த நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய ஆட்டோ. குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கனமழையால் ஒடிந்து விழுந்த மரம். கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிய ஆட்டோ. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ. கரூர் மாவட்டத்தில் கோடை வெயில் தாக்கம் வாட்டி விதைத்த நிலையில் நாள்தோறும் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்திற்கு மேல் பதிவாகினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், பரமத்தி, வேலாயுதம்பாளையம், நொய்யல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை செய்தது.

கரூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி மழையின் அளவு 173.1.00 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அணைப்பாளையம் பகுதியில் 47.6 மில்லி மீட்டர் மழையும், கரூர் மாநகர் பகுதியில் 34.2 மில்லி மீட்டர் மழையும், அரவக்குறிச்சி பகுதியில் 33.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த நிலையில் பள்ளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள செல்லு மீரான் நகர் பகுதியில் நேற்று இரவு கன மழை பெய்த பொழுது ஆட்டோ சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த மரம் திடீரென சாய்ந்தது இதில் ஆட்டோ நூல் இலையில் தப்பித்தது தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags

Next Story