தொடர் கனமழை : மூழ்கிய தரைப்பாலம், போக்குவரத்து பாதிப்பு

தொடர் கனமழை : மூழ்கிய தரைப்பாலம், போக்குவரத்து பாதிப்பு

வெள்ளப்பெருக்கு 

கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளான, கணுவாய், தடாகம், சோமையனூர் பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், பொன்னுத்து அம்மன் கோவில் ஆகிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக கணுவாய்- பன்னிமடை செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழை நீர் ஆர்ப்பரித்து வெள்ளம் போல் ஓடியது. வழக்கத்தை விட நேற்று இரவு அதிக அளவு மழை பெய்ததால் இந்த தரைப்பாலத்தில் அதிகளவு மழை நீர் ஓடுகிறது. இதனால் இவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வழியாக பொது பேருந்து போக்குவரத்து இல்லை என்றாலும் தனிநபர் வாகனங்களில் கணுவாயில் இருந்து பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மழைநீர் வெள்ளம் போல் செல்வதால் பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாமல் வேறு பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story