பலத்த காற்றுடன் கனமழை!

பலத்த காற்றுடன் கனமழை!
X

 சாத்தான்குளம் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், முக்கிய வீதிகளில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

சாத்தான்குளம் பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், முக்கிய வீதிகளில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் திங்கள்கிழமை(டிச.4) மதியம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் முக்கிய வீதிகளில் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்று வீசியதில் சாத்தான்குளம் ஊரணி சுடலைமாட சுவாமி கோயிலில் வேப்ப மரம் சரிந்தது. முத்துகிருஷ்ணாபுரம், ரங்கநாதபுரத்திலும் மரங்கள் சரிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல்துறையினா், சாலையில் நடுவே விழுந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனா்.

Tags

Next Story