குமரி மாவட்டத்தில் இடி-மின்னலுடன் கனமழை.

X
குமரி மாவட்டம் முழுவதும் இடி-மின்னலுடன் மீண்டும் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், மயிலாடி பகுதியில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரம் இடைவிடாது வெளுத்து வாங்கியது. கனமழையால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 55.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை பெய்தது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.
Tags
Next Story
