ராசிபுரத்தில் இடி மின்னல் உடன் கனமழை மக்கள் மகிழ்ச்சி
ராசிபுரத்தில் இடி மின்னல் உடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் காலை முதலே வானம் மேகமூட்டவுடன் காணப்பட்ட நிலையில் மாலையில் லேசான சாரல் மழையாக தொடங்கிய மழை கனமழையாக பெய்தது. இதனால் இப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவு வருகிறது. தொடர்ந்து இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், குழந்தைகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ராசிபுரம் கடைவீதி, மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதியில் இந்த மழை நீருடன் சாக்கடை நீரும் சாலையில் செல்வதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதேபோல் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளான பல்வேறு இடங்களில் சாரல் மழை மற்றும் கனமழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
Next Story