ஆசனூரில் காற்றுடன் கன மழை - மரம் சயந்ததால் போக்குவரத்து பாதிப்பு
சாலையில் சாய்ந்த மரம்
ஆசனூர் மலைப்பகுதிகளில் காற்றுடன் பெய்த கன மழையால் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் மூங்கில் மரம் ரோட்டில் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சத்தி அடுத்த ஆசனூர் மலைப்பகுதியில் காற்றுடன் கோடை மழை பெய்தது. பலத்த காற்றில் ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சீவக்காய் பள்ளம் என்ற இடத்தில் மூங்கில் மரம் வேரோடு முறிந்து ரோட்டில் விழுந்தது. இதன் காரணமாக வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் மரங்களை வெட்டி அகற்றினார்கள். இதையடுத்து போக்குவரத்து சீரானது.
Next Story