கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட மாற்றுப் பாதை

கனமழையால் அடித்துச் செல்லப்பட்ட மாற்றுப் பாதை

கனமழை

மாத்தூர் தொட்டி பாலத்தின் கீழ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நடை பாதை மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் அருவிக்கரை ஊராட்சிக்குட்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலத்தின் அருகில், பரளியாற்ற்றின் குறுக்கே மாத்தூர் - முதலார் இணைப்புப்பாலம் நபார்டு திட்டத்தில் ரூ.5.38கோடி செலவில் கட்டும் பணிக்காக கடந்த பிப்பிரவரி மாதம் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜூம், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரும் அடிக்கல் நாட்டினர்.

தொடர்ந்து முதல் கட்டமாக இரண்டு பிரமாண்ட தூண்கள் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக தொட்டிப் பாலத்தின் எதிரில் உள்ள சப்பாத்து பாதை உடைக்கப்பட்டு தற்காலிக பாதை அருகில் உருவாக்கப்பட்டது. இந்த பாதை வழியான மாத்தூரில் இருந்து முதலார், வேர்க்கிளம்பி பகுதிக்கு போக்கு வரத்து நடந்து வந்தது. இந்நிலையில் பரளியாற்றில் வெள்ளம் வரத்து அதிகரித்ததால் தற்காலிக பாதையில் போடப்பட்டிருந்த கல், மண் ஆகியன வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு சென்று வர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மறு பகுதி மக்கள் சுமார் 6 கி.மீ. தூரம் சுற்றி ஊருக்கு வரும் சூழல் உருவாகி உள்ளது.

Tags

Next Story