குமரியில் கனமழை: சாலையின் குறுக்கே விழுந்த மரங்கள்
குமரியில் கனமழை
குமரியில் பெய்த கனமழையால் மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கடந்த ஒரு வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. இயல்புக்கு அதிகமாக மழை பெய்வதால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மண்ணரிப்பு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்து வருகின்றன. நாகர்கோவில் கோணம் அரசு கலைக் கல்லூரி முன்பு பழமையான வேப்பமரம் ஒன்று சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதில் மின் கம்பங்கள் சேதமாகி, மின்இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரிகள் சென்று மின் இணைப்பை துண்டித்து, மரங்களை வெட்டி அகற்றினர். இதற்கிடையே இன்று காலை பறக்கை அருகே பழமையான வேப்பமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து தடை ஏற்பட்டது. மேலும் சாய்ந்த மரங்களை வெட்டி அகற்றினர்.
Next Story