கனமழை : நீலகிரியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை : நீலகிரியில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
X

கனமழை 

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருவதுடன் கடும் குளிர் நிலவுகிறது. இந்த கனமழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி, குந்தா உள்ளிட்ட 4 தாலுக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மேலும் மழை பெய்து வருவதால் மலைப்பாதையில் மண் சரிவு மற்றும் மரங்கள் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்த துறை சார்ந்த அதிகாரிகள் பணியில் தயார் நிலையில் உள்ளனர்.

Tags

Next Story