ஈரோட்டில் கனமழை; 200 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

X
ஈரோட்டில் நேற்று நள்ளிரவில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் பிச்சைக்காரன் பள்ள ஓடையில் தண்ணீர் அதிக அளவு பெருக்கெடுத்து ஓடியதால் அருகிலுள்ள மல்லி நகர், அன்னை சத்யா நகர் போன்ற அடிக்குமாடி குடியிருப்பு பகுதியில் மழை நீர் சூழ்ந்தது . அடுக்குமாடி குடியிருப்பு கீழ்தளங்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் வீடுகளுக்குள்ளே சென்றது. இதனால் குடியிருப்புவாசிகள் அடுக்குமாடி மேல்தளங்களில் தஞ்சம் புகுந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர்.
Tags
Next Story
