கள்ளக்குறிச்சியில் கனமழை - பருத்தி வார சந்தை ரத்து
பருத்தி சந்தை
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தை நடத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி,விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்குகொண்டு வருகின்றனர். தற்போது பெய்துவரும் மழை காரணமாக பருத்தி மூட்டைகளின் வரத்து படிப்படியாக குறைந்து வருவதால், அவ்வப்போது சந்தையில் வர்த்தகம் தடைபட்டு வந்தது. அதன்படி நேற்று பெய்த மழை காரணமாக சந்தைக்கு 40க்கும் குறைவான மூட்டைகளே விற்பனைக்கு எடுத்து வரப்பட்டன. இதனால் நேற்றைய பருத்தி வார சந்தையில் வர்த்தகம் ரத்து செய்யப்பட்டதுடன், அடுத்த வாரம் சந்தை எப்போதும்போல் தொடர்ந்து நடக்கும் என கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாக இயக்குனர் நிர்மல் அறிவித்துள்ளார்.
Tags
Next Story