கபிஸ்தலம் பகுதியில் கனமழை: மிளகாய் விளைச்சல் பாதிப்பு
விளைச்சல் பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், கபிஸ்தலம் சுற்று வட்டார பகுதிகளான இளங்காக்குடி | வன்னியடி,தென் சர்க்கை, அக்கறைப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 100 ஏக்கரில் மிளகாய் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் மிளகாய்ச் செடியில் பூத்திருந்த பூக்கள் கீழே கொட்டி உதிர்ந்து விட்டதால் சந்தையில் மிளகாய் நல்ல விலை இருக்கின்ற போதிலும் மிளகாய் விளைச்சல் இல்லாமல் போனதால் கபிஸ்தலம் சுற்று பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். மேலும் ஏக்கருக்கு 70 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில் தற்போது போதிய விளைச்சல் இல்லாததால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறனர்.
எனவே நெல், கரும்பு போன்று மிளகாய் உள்ளிட்ட தோட்டக்கலை பருகளுக்கும் அரசு விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேண்டும் மேலும் பாதிக்கப்பட்ட மிளகாய் பயிர்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு மிளகாய் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்,,