ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பல மாதங்களுக்குப் பிறகு பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான பல இடங்களில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தொடர்ந்து வெயில் 100 டிகிரிக்கு மேலாக வாட்டி வதைத்த நிலையில் பொதுமக்கள் குழந்தைகள் பெரியவர்கள் என பலர் சிரமத்திற்கு ஆளாகினர்.

மேலும் பல மாதங்களாக இப்பகுதியில் மழை இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி நடந்து வரும் வேலையில் திடீரென ராசிபுரம் நகர பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணந்தூர், பழந்தின்னிப்பட்டி, செளதாபுரம், மதியம்ப்பட்டி, அத்தனூர், போன்ற பல்வேறு இடங்களில் தற்போது ஒரு மணி நேரம் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள், மற்றும் குழந்தைகள், பெரியவர்கள் என மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் நீண்ட நாள் கழித்து பெய்த இந்த மழையால் கிராமப்புற இளைஞர்கள், மாணவர்கள் மழையில் நனைந்து உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது குளிர்ந்த காற்று வீசுவதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story