தென்காசியில் கொட்டித்தீர்த்த கனமழை- அணைகளில் நீர் வரத்து அதிகரிப்பு
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் முழு வீச்சில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 9 மில்லிமீட்டர் மழை பெய்தது. கன்னடியன் கால்வாய் பகுதியில் 21 மில்லிமீட்டர் மழை கொட்டியது. தொடர்மழையால் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இன்று அந்த அணை 60 அடியை எட்டியது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை 89 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 102 அடியாகவும் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
Tags
Next Story