தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை - விவசாயிகள் மகிழ்ச்சி

X
மழை
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த மழையினால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை மற்றும் மிதமான மழையானது அவ்வப்போது பெய்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை,போன்ற மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தூத்துக்குடி மற்றும் முத்தையாபுரம், புதுக்கோட்டை, வாகை குளம், தெய்வசெயல்புரம், வல்லநாடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1-மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதோடு வெப்பம் தணிந்து குளிர்ச்சியாக காணப்பட்டது நீண்ட நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1-மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Tags
Next Story
