ஏற்காட்டில் சாரல் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஏற்காட்டில் சாரல் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று முதல் தொடர்ந்து சாரல் மழை மற்றும் கடும் பணிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடும் குளிர் நிலவுவதால் கட்டிடத்தொழில் மட்டும் இன்றி எஸ்டேட் தொழில் அணைத்து நிருத்தி வைக்கப்பட்டுள்ளன. கடும் பணிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டு சாலைகளில் ஊர்ந்து செல்கின்றன.

மேலும் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவால் முக்கிய சாலைகள் அணைத்தும் வெருச்சோடி காணப்பட்டது. கடும் குளிர் நிலவுவதால் ஏற்காட்டிற்கு வந்திருந்த ஒரு சில சுற்றுலா பயணிகளும் தங்கள் தங்கியிருந்த அறையிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாரல் மழை மற்றும் பணிப் பொழிவால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story