கனமழை- மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்திற்கு தடை

X
தேங்கிய மழை நீர்
கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உக்கடம்,காந்திபுரம்,ராமநாதபுரம்,பூ மார்க்கெட், கவுண்டம்பாளையம், துடியலூர்,பேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை நள்ளிரவு வரை பெய்தது.இதன் காரணமாக அவிநாசி சாலையில் உள்ள மேம்பாலத்தில் கீழ் ரயில் தண்டவாள உயரதிற்க்கு தண்னீர் தேங்கியது.இதனையடுத்து தடுப்புகள் போடப்பட்டு வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று மழைநீர் தேங்கிய மேம்பாலத்தில் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.இந்த பணிகளை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் விரைந்து மழை நீரை வெளியேற்றி உத்தரவிட்டார். மாவட்டத்தின் பிரதான பகுதியாக உள்ள அவிநாசி சாலை மேம்பாலத்தில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போது தண்ணீர் தேங்கக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
