கடும் பனிப்பொழிவு பொதுமக்கள் அவதி
கடும் பனிப்பொழிவு பொதுமக்கள் அவதி
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் சேலம் தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது அதனால் சாலையில் முகப்பு விளக்கை எறிய விட்டு வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி இருபதினால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மார்கழி மாதத்தில் குளிர்காலம் தொடங்கி பனிப்பொழிவுகள்ஏற்படுவது வழக்கம் ஆனால் இந்த ஆண்டு பனி பொழிவு சற்று அதிக அளவில் காணப்பட்டு வருகிறது.
சாரல் மழைபோல் பெய்த பனிஇந்நிலையில் சாலைகள் மற்றும் வீடுகள் கூட தெரியாத அளவுக்கு கரும் புகைபோல் தொடர்ந்து காணப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிபொழிவு சாரல் மழைபோல் பெய்து வருகிறது.பொதுமக்கள் அவதிஇதனால் கரும் புகைப்போல் காட்சியளித்து தேசிய நெடுஞ்சாலையில் முகப்பு விளக்கை எறிய விட்டு செல்லும் வாகனங்களும், அப்பகுதியில் உள்ள மரங்களும் ஊர் பகுதிக்குள் இருக்கும் குடியிருப்பு வீடுகளே தெரியாத அளவுக்கு கடுமையான பனி காணப்படுகின்றது. இந்நிலையில் தற்போது இந்த பனிப்பொழிவால் கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்கள் வெளியே செல்லமுடியாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.