குவாரி லாரிகளால் தொடரும் கடும் போக்குவரத்து நெரிசல்

குவாரி லாரிகளால் தொடரும் கடும் போக்குவரத்து நெரிசல்

கல் குவாரி லாரிகள் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து காலை லோடு ஏற்றி வரும் கல் குவாரி லாரிகள், காஞ்சிபுரத்திற்குள் செல்ல, காலை 10:00 மணிக்குமேல் தான் அனுமதிக்கப்படுகிறது. இதனால், லாரிகள் குருவிமலை பகுதியில் இருந்து சாலையில் வரிசையாக நிறுத்துவது, மற்ற வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். கனரக வாகனங்கள், காஞ்சிபுரத்திற்குள் காலை 7:00 முதல், 10:00 மணி வரையும், மாலை 3:00 முதல், 5:00 மணி வரையும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கல் குவாரிகளில் இருந்து லோடு ஏற்றி செல்லும் லாரிகள், காஞ்சிபுரம் அடுத்த, குருவிமலை பகுதியில் இருந்து வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மற்ற வாகன போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படுகிறது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள், காலை 10:00 மணிக்குமேல் செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றன. இவ்வாறு தினசரி நடப்பதால் போக்குவரத்துக்கு பிரச்னை தொடர்ந்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். அந்த இடத்தில் போலீசார், லாரிகளை முறையாக அனுப்பி வைக்கின்றனர். இதை தவிர்க்க கல் குவாரிகளில் இருந்து வரும் லாரிகள், காலை 9:00 மணிக்கு மேல் வந்தால், இந்த பிரச்னை இருக்காது. லோடு ஏற்றி செல்லும் லாரிகள் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story