கடும் போக்குவரத்து நெரிசல்

கடும் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை பணிகள் நடைபெறுவதால் 5 கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை அருகே சென்னை- கன்னியாகுமரி தொழிற்பேட்டை சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெறுகிறது. இதில் காஞ்சிபுரம் - செங்கல்பட்டு செல்லும் பகுதிகளில் அய்யம்பேட்டை, முத்தியால்பேட்டை, ஏகனாம்பேட்டை, திம்மராஜம்பேட்டை பகுதிகளில் சாலை விரிவாக்கம் பணிகள் மாலை நேரத்தில் நடைபெற்று வருவதால் தினத்தோறும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் இருபுறமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மாலை நேரத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருவதால் 2 மணிக்கு நேரத்திற்கு மேல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ மாணவிகள், வேலை முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதால் சாலை பணிகள் இரவு நேரத்தில் பணியில் ஈடுபட்டால் கடும் போக்குவரத்து நெரிசலை தடுக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து செங்கல்பட்டு மற்றும் சென்னை மருத்துவமனைக்கு நோயாளிகளின் இடமாற்றம் செய்யும் 108 அவசர வாகனங்களும் இது போன்ற நேரங்களில் சிக்கி நோயாளிகளுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்துகிறது.

இந்த அவசர ஊர்தி வாகனங்கள் செல்ல வழியில்லாமல் இன்று சிறிது நேரம் காத்திருக்கும் நிலையில் மற்ற வாகன ஓட்டுனர்கள் அதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தும் பாதி தூரம் சென்ற நிலையில் நின்று வட்டது. இதுபோன்ற நிலைகளை தவிர்க்க இரவு நேரங்களில் சாலை பணியை மேற்கொள்ள கூறிய கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கூறுகையில், சாலை பணிக்காக மேற்கொள்ளப்படும் கலவைகள் இரவு நேரங்களில் தரம் அறிய இயலாத காரணமும், அதிகாரிகள் முன்னிலையில் காலை வேலைகளில் இப்பணி நடைபெறுவதும் இதற்குக் காரணம் என தெரிவித்தனர்.

Tags

Next Story