ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்.
ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து சென்னை நோக்கி படையெடுப்பு பொது மக்களால் ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல். கடந்த 19 -ஆம் தேதி தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் சென்னையில் இருந்து பொதுமக்கள் வாக்களிப்பதற்காக தென் மாவட்டங்களை நோக்கி சென்று தனது ஜனநாயக கடமையாற்றினர்.

இந்த நிலையில் நாளை அலுவலகங்கள் செயல்பட உள்ள நிலையில்,தென் மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் சென்னை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளதால்,சென்னை புறநகர் மாவட்டமான செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கிய வருகின்றனர்.

Tags

Next Story