ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

பேரணி 

விழுப்புரத்தில் நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் தற்போது 35-வது சாலை பாதுகாப்பு மாதம் கடைபி டிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி விழுப்புரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில், விழுப்புரம் பகுதியை சேர்ந்த இருசக்கர வாகன பழுதுபார்ப் போர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு பேரணியாக சென்ற னர். இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ரெயில் நிலையம் அருகில் முடிவடைந்தது.

பேரணியின்போது தலைக்கவசம் உயிர்க்கவசம் என்றும், இருசக்கர வாகனங்களில் செல்வோர் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷம் எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். இதில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ஞானசேகர், போலீசார் நீலகண்டன், ஹரிகுமார், வினோத் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story