கல்லூரி மாணவிகள் பங்கேற்ற தலைக்கவச விழிப்புணர்வு பேரணி
விழிப்புணர்வு பேரணி
திருச்சி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் (15ம் தேதி) தலைக் கவசப் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சார்பில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை உதவி ஆணையர் ஜோசப் நிக்ஷன் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பயணம் செய்யும் முறையினையும் பாதுகாப்பும் குறித்து அனைவரையும் உறுதி மொழியினையும் எடுக்கச் செய்தார். அபிராமி பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகி பூங்கொடி சுப்ரமணியன், கலந்து கொண்டு பேரணியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பனியன் சட்டை வழங்கி சிறப்புச் செய்தார். புது வாழ்வு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு இரத்ததானம் வழங்குவோர் சங்கத்தில் இருந்து பிளட் ஷாம் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார். கல்லூரி முதல்வர் இசபெல்லா ராஜகுமாரி தலைமையில், கல்லூரியின் செயலர் ஆனி சேவியர், கல்லூரியின் துணை முதல்வர் ஜீடி ஹோம்ஸ் முன்னிலையிலும் இவ்விழா நடைபெற்றது. இப்பேரணியை புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் உதவி போக்குவரத்துத் துறை காவல் ஆணையர் ஜோசப் நிக்ஷன் மற்றும் போக்குவரத்துத் துறை காவல் ஆணையர், நிவேதா உதவி காவல் ஆணையர் ஸ்ரீரங்கம் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் கல்லூரியின் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள், அலுவலக நிர்வாகப் பணியாளர்கள், தூய வளனார் கல்லாரி வழியாகச் சென்று அண்ணாசாலையை அடைந்து பிஷப் ஹீபர் கல்லூரி வழியாகப் புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியில் முடிவடைந்தது.
Next Story