கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஆலோசனை முகாம்

கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஆலோசனை முகாம்

ஆட்சியர் கிறிஸ்துராஜ்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்கள், மாணவியர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்க முகாம் நடைபெறவுள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 12ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்கக்கூடிய வகையிலான முகாம் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 76 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2023 - 24 ஆம் கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு முகாம் நடைபெறுகிறது.

தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் , பாலிடெக்னிக் , ஐடிஐ , நர்சிங் கல்லூரிகள் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வசதியாக நாளைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி சார்ந்த முதல்வர்கள் , பேராசிரியர்கள் , நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமினை 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில விரும்பும் மாணவ , மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story