கோவில் திருவிழாவில் நல உதவி வழங்கிய ஹைகோர்ட் நீதிபதி
நலத்திட்ட உதவிகள் வழங்கிய நீதிபதி
கன்னியாகுமரி மாவட்டம் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் சித்திரை திரு விழா கடந்த 28 ம் தேதி துவங் கியது. 8ம் திருவிழாவில் இந்து சமய மாநாடு முனைவர் ரதி குமாரி தலைமையில் நடந்தது. கூட்டத்தில்,
ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மதுரை ஹைகோர்ட் நீதிபதி விக்டோரியா கௌரி பேசிய தாவது,நாம் வாழும் நாட்களில் இந்த சமூகத்திற்கு பயன்படும் விதத்தில் இருக்க வேண்டும். நாம் தகுதி வாய்ந்த மனிதர்களாக உருவாக வேண்டும். சமுதாயத்துக்கு நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும்.
இந்தியா மக்கள் தொகை பெருக்கத்திலும் மிக வேகமாக வளர்ந்திருக்கிறது. 140 கோடிமக்களில் டாக்டர்கள், இன்ஜி னியர்கள், பட்டதாரிகள் அதி கரித்துள்ளார்கள். இவர்களின் ஆனால், தனித்திறமை குறைவாக இருக்கிறது. தனித் திறமை வளர்த்து கொண்டால் தான் நாடு வளர்ச்சி அடையும்.தனித்திறமை வளர்த்துக் கொள்வதில் தடுமாறிக் கொண் டிருக்கிறார்கள் இளைஞர்கள் என்பது வேதனை தரக்கூடியநிகழ்வாக உள்ளது இவ்வாறு அவர் பேசினார்.
முனைவர் ராஜாராம் ஏழை களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொழிலதிபர் முருகன், கோவில் தலைவர் குமார், செயலாளர் துளசிதாஸ், பொருளாளர் சௌந்தரராஜன், துணை தலைவர் முருகன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.