தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் - மாணவர் சங்கத்தினர் புகார்

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் - மாணவர் சங்கத்தினர் புகார்

மனு அளித்த மாணவர் சங்க நிர்வாகிகள் 

அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரியிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை மனு வழங்கினர்.

நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட கல்வி அதிகாரியிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை மனு வழங்கினர் மாணவர் சங்கத்தின் சார்பில், நாமக்கல் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் நேரடி உதவியாளரிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் லட்சக்கணக்கான ஏழை எளிய மாணவர்களும் கல்வி பயின்று வருகின்றனர். தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தெரிகிறது.

எனவே தமிழ்நாடு அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை மட்டும் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும் பள்ளி தகவல் பலகைகளில் ,அரசு நிர்ணியித்த கட்டணத்தை பதிவிட வேண்டும் .அதேபோல RTE மூலம் பள்ளிகளில் சேர்க்க படும் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் கட்டணம் வசூலிப்பதையும் தடுக்க வேண்டும். இவை அனைத்தும் சரியான முறையில் இயங்குகிறதா, நடைமுறைப்படுத்தப்படுகிறதா ,என்பதை மாவட்டம் முழுவதும் குழு அமைத்து கண்காணிக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த மனு வழங்கும் நிகழ்வின் போது சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்..

Tags

Next Story