உத்திர காவேரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பால பணி; ஆட்சியர் ஆய்வு

உத்திர காவேரி ஆற்றின் குறுக்கே  உயர்மட்ட மேம்பால பணி; ஆட்சியர் ஆய்வு

கொண்டத்தூர் கிராமத்தில் ஆற்றின் குறுக்கே நடந்து வரும் உயர்மட்ட மேம்பால பணியினை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொண்டத்தூர் கிராமத்தில் ஆற்றின் குறுக்கே நடந்து வரும் உயர்மட்ட மேம்பால பணியினை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவிசெட்டிகுப்பம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2.35 கிலோமீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள தார் சாலை, இச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் ஆகியவற்றையும் பார்வையிட்டு, சிறுபாலம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள அளவீடுகளின்படி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை அளவீடுகள் எடுத்துஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு செய்தார்.

பின்னர் வண்ணாந்தாங்கல் ஊராட்சி கொண்டத்தூர் கிராமத்தில் உத்திர காவிரி ஆற்றின் குறுக்கே வண்ணாந்தாங்கல் முதல் கொண்டத்தூர் வரை உள்ள சாலையின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பால பணிகள், குருவராஜபாளையம் ஊராட்சியில் உத்திர காவேரி ஆற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் உயர்மட்ட மேம்பால பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பாலங்கள் கட்ட பயன்படுத்தப்படும் கான்கிரீட் கலவைகளின் தாங்கும் திறன் பரிசோதனையை அங்கு அமைந்துள்ள ஆய்வகத்திற்கு சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.ஆர்த்தி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story