பரந்துாரில் சீரமைக்க வேண்டிய உயர்கோபுர மின்விளக்கு
எரியாத மின் விளக்கு
பரந்துார் மேம்படுத்தப்பட்ட சுகாதார வளாகத்தில் போடப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் அடுத்த, பரந்துார் கிராமத்தில், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார வளாகத்தில், உயர்கோபுர மின்விளக்கு பொருத்தப்பட்டு உள்ளது. இந்த உயர்கோபுர மின்விளக்கில், நான்கு புறங்களிலும் ஒளிரும் வகையில் அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்கு பொருத்தப்பட்டு உள்ளன.
இதில், ஒரு விளக்கு மட்டுமே ஒளிர்கிறது. மற்ற விளக்குகள் ஒளிரவில்லை. குறிப்பாக, உயர்கோபுர மின்விளக்கு, இரவு மற்றும் பகல் என, அனைத்து நேரங்களில் ஒளிர்கிறது.
பகல் நேரத்தில் ஒளிர்வதால், மின்சாரம் வீணாவதோடு, மின் கட்டணமும் விரையமாகிறது. எனவே, பரந்துார் மேம்படுத்தப்பட்ட சுகாதார வளாகத்தில் போடப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு, பகலில் ஒளிர்வதை கட்டுப்படுத்தவும், ஒளிராத மற்ற விளக்குகளை சரி செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story