ரூ.7.40 லட்சத்தில் உயர்கோபுர சோலார் மின்விளக்கு

X
கிண்ணிக்கண்ணன் விளையில் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ.7.40 லட்சத்தில் மதிப்பீட்டில் உயர்கோபுர சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட கிண்ணிக்கண்ணன் விளையில் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7.40 லட்சம் மதிப்பில் உயர்கோபுர சோலார் மின் விளக்கு அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக எம்.பி., விஜய்வசந்த் கலந்து கொண்டு மின்விளக்கு சேவையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி தாமரை பிரதாப், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், ஊர் தலைவர் செந்தில், துணைத் தலைவர் இ.எம்.ராஜா, காங்கிரஸ் நிர்வாகி கிங்ஸ்லி உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
