தேர்தல் புறக்கணிப்பு பகுதியில் அதிக வாக்குப்பதிவு - சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அதிர்ச்சி

தேர்தல் புறக்கணிப்பு பகுதியில் அதிக வாக்குப்பதிவு - சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அதிர்ச்சி

சிப்காட் 

சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக தேர்தலை புறக்கணிப்பதாக சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அறிவித்த, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்,76.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

நாமக்கல் அடுத்த வளையப்பட்டி பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த கிராமங்களில் 76 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளது. இதற்கு காரணமாக சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில் 78.21 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2014, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை விட சராசரியாக 2 சதவீதம் வரை தற்போது குறைவாக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு கடுமையாக வெப்பம் வீசி வருகிறது. தேர்தல் நடைபெற்ற கடந்த 19 ஆம் தேதி நாமக்கல் பகுதியில் 105 டிகிரி வெப்பம் வீசியது. இதனால் வாக்குபதிவு சற்று குறைந்துள்ளது.இந்த நிலையில் மோகனூர் தாலுக்காவில் சிப்காட் அமைக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிராக சிப்காட் எதிர்ப்புக் குழு என்ற பெயரில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இவர்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்தனர். இந்த குழுவில் இடம் பெற்றுள்ள விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதன் நிர்வாகிகளை அழைத்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பார்த்தீபன், தேர்தலுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் புறக்கணிப்பை கைவிடும்படி கேட்டு கொண்டார். ஆனால் சிப்காட் எதிர்ப்பு குழுவினர் தேர்தலை புறக்கணிப்போம் என கூறினர். இதன்படி கடந்த 19 ஆம் தேதி மோகனூரில் சிப்காட் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர்கள் சாமியான பந்தல் போட்டு தேர்தலை புறக்கணிக்கப்பதாக கூறி காலை முதல் மாலை வரை அமர்ந்திருந்தனர்.அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தேர்தலை புறக்கணிப்பதில் உறுதியாக இருக்கிறோம் என கூறிவிட்டனர்.

சிப்காட் தொழிற்பேட்டைக்கு எதிராக தேர்தலை புறக்கணிப்பதாக சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அறிவித்த, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 76.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த பகுதியில் மொத்தம் 20 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. 17 ஆயிரத்து 163 வாக்காளர்களில் 13 ஆயிரத்து 100 பேர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு என சிப்காட் எதிர்ப்பு குழுவினர் அறிவித்த பகுதிகளில் 76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது சிப்காட் எதிர்ப்பு குழுவினரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பகுதி மக்கள் விவசாயிகள் அனைவரும் சிப்காட் தொழிற்பேட்டைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் 76 சதவீதம் வாக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவுடன் தமிழ்நாடு அரசு சார்பில் விரைவில் சிப்காட் துவக்க விழா நடைபெறும் என தெரிய வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story