அதிக மகசூல் தரும் நெட்டை தென்னை ரகம்: விவசாயிகளுக்கு அழைப்பு
அதிக மகசூல் தரும் நெட்டை தென்னை ரகத்தில் பயன் பெற விவசாயிகள் முன்வர வேண்டும் என விராலிமலை வட்டார வேளாண்மை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விராலிமலை நீர் பழனியில் உள்ள வேளாண் விரிவாக்கம் மையங்களில் அரசம்பட்டி நெட்டை தென்னங்கன்றுகள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரகமானது வறட்சி பூச்சி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு தன்மை உடையது. அனைத்து மண் வகைகளுக்கும் பருவ காலங்களுக்கும் ஏற்ற சிறந்த ரகமாகும் 4 ஆண்டுகளில் காய்க்க தொடங்கி சராசரியாக 70 முதல் 80 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது.
இளநீர் எண்ணெய் இரண்டுக்கும் ஏற்ற ராகமாகும் ஓராண்டுக்கு 200 முதல் 250 காய்கள் வரை காய்க்கும் தன்மை உடையது. ஏக்கருக்கு 80 தென்னம் கன்றுகளை 25 அடிக்கு 25 அடி இடைவெளியில் 3 அடி நீளம் 3 அடி அகலம் 3 அடி உயரம் உடைய குழிகளில் நடவு செய்து பராமரித்தால் நல்ல மகசூல் பெற இயலும் ஒரு கன்றின் முழு விலை ரூபாய் 60 இப்போது விராலிமலை வட்டாரத்தில் மழை பெய்து வருவதால் இதை பயன்படுத்தி தென்னங்கன்றுகளை நடவு செய்து விவசாயிகள் பயனடையலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.