திருவரங்குளம் அருகே மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
வழிகாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள கை குறிச்சி அரசு முன்மாதிரி பள்ளியில் லேனா விளக்கு அழியா நிலை தோப்புக் கொல்ளை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 10, 11, 12, ஆம் வகுப்பு அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டி பட்டறை கலங்கரை நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ஆலங்குடி தாசில்தார் பெரியநாயகி வருவாய் ஆய்வாளர்கள் துரைக்கண்ணு வெங்கடேஷ் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனி வட்டாட்சியர் பொன்மலர் கலந்து கொண்டு உயர்கல்வி வழிகாட்டி பட்டறை கலங்கரை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் அவர் பேசும்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருவதாகவும் தமிழக அரசு அவர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கி வருவதையும் சுட்டிக்காட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 10, 11, 12,ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் 80% பேர் உயர் கல்வி வழிகாட்ட நிகழ்ச்சி கலந்து கொண்டுள்ளதாகவும் அவர்களுக்கு கையேடு பேனா வழங்கப்பட்டுள்ளதாக கூறினார் வழிகாட்டு பயிற்சி கள் வழிகாட்டு நிகழ்ச்சியினை ஆசிரியர்கள் முகமது உமர் ,
கோவிந்தராஜ் ராதாகிருஷ்ணன் வீரமாமுனிவர் ராஜா செபாஸ்டியன் புதுகை பாவை இலக்கியப் பேரவை செயலாளர் சுசிலா தேவி ஆகியோர் உயர் கல்வி வழிகாட்டு வழிமுறைகளை மாணவ மாணவிகளுக்கு எடுத்து கூறினார் முடிவில் பள்ளி ஆசிரியர் பாண்டியராஜன் நன்றி கூறினார்