சேலத்தில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சேலத்தில்  உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், கல்லூரிக்கனவு என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், கல்லூரிக்கனவு என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், கல்லூரிக்கனவு என்ற தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு படிக்கும் போதே பிளஸ்-1 வகுப்பில் என்ன பிரிவு சேரலாம் என்ற கனவோடு படிக்கின்றனர். அந்த அளவிற்கு சிந்தனையோடு படிக்கும் மாணவ, மாணவிகள் எந்த நோக்கத்திற்காக படிக்கிறோம் என்பதையும் சிந்தித்து படிக்க வேண்டும்.

அப்போது தான் நோக்கம் நிறைவேறும். எனவே படிக்கும் போதே எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும். நாட்டில் உள்ள பல மொழிகளில் ஏதேனும் சில மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும். இது படிப்பிற்கும், நோக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக தொன் போஸ்கோ அன்பு இல்ல பேராசிரியர் அருள்மணி கஸ்மீரா ராஜ் வரவேற்று பேசினார். முடிவில் கல்வி ஆலோசகர் இளையராஜா நன்றி கூறினார். இதில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story