நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில், பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “என் கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கும் போது, பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவ,மாணவிகள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்து கல்வியியல் வல்லுநர்களின் அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சி “என் கல்லூரிக்கனவு” நிகழ்ச்சியாகும், நீங்கள் என்னென்ன படிக்கலாம் எந்தெந்த துறையை தேர்வு செய்யலாம் என்னென்ன படித்தால் எங்கு வேலை கிடைக்கும் என்பது சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உங்களுக்கு இந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கூற இருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கக்கூடிய மாணவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வராதவர்களிடமும், தங்களது நண்பர்களிடமும் இந்த திட்டங்களை பற்றி எடுத்துக் கூற வேண்டும். நிச்சயமாக பொருளாதார சூழ்நிலை மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெறுவதற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் மாவட்ட நிர்வாகத்தை உடனடியாக அணுகலாம் அதற்கான உதவிகளை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. என தெரிவித்தார்.

இதில், தொழில்முறை படிப்பு என்ற தலைப்பில் ஸ்ரீஆர்த்தி மனோகரன், கலை அறிவியல் படிப்பு என்ற தலைப்பில் கிறிஸ்து ராஜா ஆகியோர் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பொறுப்பில் உள்ள சுரேஷ்குமார், ஆதிதிராவிடர் நலத்துறை திட்ட ஆலோசகர் ராஜாஜெகஜீவன், ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அனிதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story