பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு

பள்ளிபாளையத்தில் நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு

பள்ளிபாளையத்தில் நடந்துவரும் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பள்ளிபாளையத்தில் நடந்துவரும் மேம்பால பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சென்னை கன்னியாகுமரி தொழிற்தட திட்டத்தில், சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பள்ளிபாளையத்தில் மேம்பாலம் மற்றும் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சசிகுமார் ,ஈரோடு உதவி கோட்ட பொறியாளர் தாமரைச்செல்வி, உதவி பொறியாளர் கபிலன் மற்றும் ஆர்பிபி ஒப்பந்ததாரருடன் பள்ளிபாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மற்றும் அலமேடு பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே உள்ள பிரதான சாலை ஓரத்தில், மழை நீர் வடிகால் முறையாக அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது . தொடர்ந்து பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களை அதிகாரிகள் அறிவுறுத்தினர்...

Tags

Next Story